search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ அறிக்கை"

    • இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

    இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது.

    இந்நிலையில் இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.

    இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது.

    ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1939-ல் 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார் என்றும் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. #MahatmaGandhi
    புதுடெல்லி:

    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

    அதற்கு முன் காலங்களில் அவரது உடல் நிலை எப்படி இருந்தது? என்பது பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இப்போது வெளியாகி உள்ளது.

    இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் மருத்துவ கமிட்டி பத்திரிகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காந்தி பற்றிய பழங்கால மருத்துவ அறிக்கையை தேடி அதை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அதில் 1939-ல் மகாத்மா காந்தி 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார். அவரது உடல் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. உயர் ரத்த அழுத்த நோயில் அவதிப்பட்டு வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவருக்கு 1925, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் மலேரியா நோய் தாக்கி இருந்தது. சரி செய்ய முடியாத அளவிற்கு நுரையீரல் அழற்சி நோய் தாக்கி இருந்தது. மேலும் நுரையீரல், இதயத்தில் சுருக்கம், ஆங்காங்கே குழிகள் தோன்றி இருந்தன.

    காந்தி தினமும் அதிக தூரம் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு 185 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். இவர் 1913-ல் இருந்து 1948-ல் கடைசி வரை 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியை 2 தடவை சுற்றி வரும் தூரமாகும்.

    காந்திக்கு 1937 மற்றும் 1940 ஆகிய நாட்களில் இ.சி.ஜி. பரிசோதனை நடத்திய இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

    அவருக்கு இயற்கை மருத்துவம் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே இயற்கை மருத்துவ முறைகளை அதிகம் சாப்பிட்டார். அது மட்டுமல்ல தனது உடலையே இயற்கை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

    மனதை நன்றாக வைத்திருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

    மகாத்மா காந்தி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆவணங்கள் மூலம் இந்த தகவல்களை திரட்டியதாக இந்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் பல்ராம் பாகவா தெரிவித்தார்.  #MahatmaGandhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சிறிது கவலை அளிக்கும் வகையில் அறிக்கை வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மருத்துவ அறிக்கையால் கவலை அடைந்துள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்து வருகின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 



    இது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த மேலும் 5 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.



    இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 42 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் முசாபர்பூர் போலீசார் பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. நேற்று கையில் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ அறிக்கையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, நேற்று தெரிய வந்தது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் காமுகர்களால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டில் ஆட்சி நிர்வாகம் மேம்பட்டு இருப்பதாக பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை வெறும் கோஷமாகவே வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    ×